/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
மயூர் விகாரில் தியாகராஜர் ஆராதனை
/
மயூர் விகாரில் தியாகராஜர் ஆராதனை

தில்லி கர்நாடக சங்கீத சபாவும் மயூர்விகார் ஸ்ரீ சுப சித்தி விநாயகர் ஆலயமும் இணைந்து தியாகராஜர் ஆராதனை விழாவை இரண்டுநாள் இசை நிகழ்வாக கோவில் வளாகத்தில் கொண்டாடினர். முதல் நாள் சங்கீதம் பயிலும் மாணவ மாணவிகள் , குருமார்கள் பலரும் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின். கிருதிகளை பாடி அஞ்சலி செலுத்தினர்.
அன்றைய தினம் தலைநகரில் சிறந்த நால்வருக்கு அவரவர் துறையில் சிறந்து பணியாற்றியமைக்கு பாராட்டு பத்திரம் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனர். சங்கரன் ஜெயராமன் - சமாஞ் சேவக் ரத்னா; ஸ்ரீதர் வாசுதேவன் ..நாட்ய வேத நிபுணா; தாளமணி வெற்றி பூபதி..லயயோக நிபுணா; இந்துஸ்தானி இசை கலைஞர் குலாம் ஹாசன் கான்...நாதயோகநிபுணா பட்டங்கள் வழங்கப்பட்டன. இந்த கெளரவங்களை ஜெ.வி.என்.சுப்ரமணியன், பேராசிரியர் டாக்டர் ரமேஷ் கெளர் வழங்கி வாழ்த்தி பேசினர்.
இதனை தொடர்ந்து மல்லாடி சகோதரர்களின் கர்நாடக சங்கீத நிகழ்ச்சி நடைபெற்றது. கிரிராஜ சுதா தனயா( பங்களா), நீவண்டி தெய்வமு( பைரவி), சக்ரவாகத்தில் சுகுனமுலேசெப்புகொண்டி, லலிதேஸ்ரீப்ரவ்ருத்தே ( லால்குடி பஞ்ச ரத்னம்) நரசிம்ம நன்னுப்ரோவவே( பிலஹரி) ரஞ்சனியில் துர்மார்க்க சரமுலனுதொரனீ, ஜனரஞ்சகமான நீவல்ல குணதோஷ மேமி, ஓ ரங்க சாயி, கொலுவையுண்ணாடே பாடிக்கொண்டு ஹீசைனியில் ராம ராம சீதாவை ஆராதித்து இசை மாலையை இனிதாய் வழங்கினார்கள். அவர்களுக்கு தலைநகர் இசைக்கலைஞர்கள் ராகவேந்திரா வயலினிலும், அபிஷேக் அவதானி மிருதங்கத்திலும், கடத்தில் வருண் ராஜ சேகரும் இணைந்து இசைவாய் வாசித்து இசை நிகழ்ச்சியை களைகட்ட வைத்தனர்.
அடுத்த நாள் காலை மல்லாடி சகோதரர்கள் வழிநடத்த உள்ளூர் கலைஞர்கள் இணைந்து பஞ்சரத்ன பாடல்களை பாடி அஞ்சலி செலுத்தினர். காளிகா பீடம் கங்கோத்ரி அனந்த ஸ்ரீ விபூஷித் நாராயண தீர்த்த ஸ்வாமிகள் வருகை தந்து ஆசீர்வதித்தது சிறப்பம்சம். சிறப்பு விருந்தினர் தில்லி தமிழ் சங்க செயலர் முகுந்தன் கலைஞர்களை கெளரவித்தார். இரு நாள் நிகழ்வுகளை மீனா வெங்கி தொகுத்து வழங்கினார். கர்நாடக சங்கீத சபாவும் கோவில் நிர்வாகமும் மிகச் சிறந்த முறையில் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
- நமது செய்தியாளர் மீனா வெங்கி