/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
சிருங்கேரி சங்கராச்சாரியார் நவ. 26 நொய்டா கோவிலுக்கு வருகை
/
சிருங்கேரி சங்கராச்சாரியார் நவ. 26 நொய்டா கோவிலுக்கு வருகை
சிருங்கேரி சங்கராச்சாரியார் நவ. 26 நொய்டா கோவிலுக்கு வருகை
சிருங்கேரி சங்கராச்சாரியார் நவ. 26 நொய்டா கோவிலுக்கு வருகை
நவ 11, 2025

சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீய சுவாமிகள் நவம்பர் 26, புதன்கிழமை அன்று நொய்டாவில் உள்ள செக்டார் 62, ஸ்ரீ விநாயக மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோயிலுக்குச் வருகை தருகிறார்.
இது தொடர்பாக, புது டில்லி சங்கர வித்யா கேந்திராவில் நடைபெற்ற ஸ்வாகத் விழாவில் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அதன் தலைவர் ரவி பி சர்மா மற்றும் மூத்த உறுப்பினர் எஸ் வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். கோவில் பிரசாதம், நவம்பர் 26க்கு அழைப்பிதழ் மற்றும் கோவில் கோப்புறை வழங்கப்பட்டது.
மேலும், 'வளர்பிறை சஷ்டி நாளான' புதன்கிழமை கோவிலுக்கு வருகை தரும் போது, ஸ்ரீ கார்த்திகேயருக்கு தனது கைகளால் சிறப்பு அபிஷேகம் செய்வது குறித்து மகிழ்ச்சி அடைந்தார். அவர் கோயிலுக்கு வருகையில் பூர்ண கும்பம் மற்றும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தை ஏராளமான பெண்கள் குழு பாராயணம் செய்து வரவேற்பார்கள். மேலும், வில்வ மரம் நட்டு கோவில் வளாகத்தை பார்வையிடுவார். அன்றைய நிகழ்ச்சி தெய்வீக பிரார்த்தனை பாடலுடன் தொடங்கும், அதே நேரத்தில் சன்ஸ்தான் தலைவர் வரவேற்று பேசுவார்.
அபிஷேகம் தவிர, வேத பாராயணம் இருக்கும், மற்றும் அவரது புனித அனுகிரஹ பாஷாணம் வழங்கப்படும். பக்தர்களுக்கு குங்கும பிரசாதம் வழங்கப்படும். மகா பிரசாதம் விநியோகத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெறும்.
- நொய்டாவில் இருந்து நமது செய்தியாளர் வெங்டேஷ்
