/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
புதுடில்லி ஸ்ரீ மீனாட்சி கோவிலுக்கு சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு விஜயம்

நவ 28, 2025

புதுடில்லி ஸ்ரீ மீனாட்சி கோவில் ரோகிணி ஐயப்பன் கோயிலுக்கு சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு விஜயம்
வட இந்தியாவில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம், புதுடில்லி சாலிமார் பாக்கில் உள்ள ஸ்ரீ மீனாட்சி கோவிலுக்கு நவ-28 அன்று விஜயம் செய்தார்.
ஜகத்குருவிற்கு பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ஸ்ரீ மஹாசன்னிதானம் விநாயகர், ஆஞ்சநேயர், சுப்ரமணியர், அய்யப்பன், நவக்கிரஹ சன்னதிகளில் தரிசனம் செய்தார். அதைத் தொடர்ந்து, ஸ்ரீ மீனாட்சி மற்றும் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் சன்னதிகளில் தீபாராதனை காட்டி தரிசனம் செய்தார்.
இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் ஜகத்குரு மகாஸ்வாமி தனது ஆசிகளைப் பெற வந்த பக்தர்களைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார். அனைவருக்கும் சுவாமிகள் பிரசாதம் வழங்கி பக்தர்கள் எல்லா நன்மைகளும் பெறும் வகையில் கருணைகூர்ந்து தமது அருளாசிகளை பொழிந்தார்கள்