தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/பிற மாநில தமிழர்/புதுடில்லி/ டில்லியில் முப்பெரும் விழா

டில்லியில் முப்பெரும் விழா

டில்லியில் முப்பெரும் விழா


ஏப் 13, 2026

Follow on GoogleFavourite on Google

ஏப் 13, 2026


Latest Tamil News
அ நிறம் | அளவு

தில்லி, மயூர் விஹார் மூன்றாம் கட்டத்தில் உள்ள பாக்கெட் ஏ2 சமுதாய மண்டபத்தில், தமிழ்ர் நலச் சங்கம் சார்பில் முப்பெரும் விழா [30வது ஆண்டு விழா, பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு] ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காலை 8 மணிக்கு, பொங்கல் மற்றும் சூரிய பூஜையுடன் தமிழ் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. கோண்ட்லி சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் குமார் விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். பிற்பகலில், கரோலி கவுன்சிலர் பிரியங்கா கௌதம் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார்


மாலை 4.30 மணிக்கு, திருக்குறள் ஓப்பித்தல் போட்டி, மாறுவேடப் போட்டி மற்றும் நடனப் போட்டி ஆகியவை நடத்தப்பட்டன. மாலை 6.30 மணிக்கு, தமிழ் பயிலரங்க குழந்தைகளின் வரவேற்பு நடனம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ராதிகா கத்தலால் (பத்மஸ்ரீ) மற்றும் SNA விருது பெற்ற கீதா சந்திரனின் மாணவியின் கலாத்வனி அகாடமி மாணவர்கள் ஆத்ரிதி மொஹந்தி, மிஷ்கா குப்தா, அனிகா செங்கர், அத்விகா செங்கர் மற்றும் வர்ணிஷா ரத்னேஷ் ஆகியோர் பங்குபெற்ற பரதநாட்டியம் & நித்ய களரி, பரதநாட்டியம் மற்றும் தமிழ் பயிலரங்க குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

லயன்ஸ் முனைவர் தலைமை புரவலர் ஸ்ரீ கணேஷ் சேவா சமாஜ், மயூர் விஹார் கட்டம் 2, சங்கரன் ஜெயராம், தில்லி சுற்றுலாத் துறை, போக்குவரத்து மேம்பாட்டுக் கழகத்தின் பொது மேலாளர் டி.கார்த்திகேயன், சிறப்பு உரை ஆற்றி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கினர்.


தமிழ் பயிலரங்க ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர் தில்லி தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலர் முகுந்தன், தில்லி கம்பன் கழக நிறுவனர்-தலைவர் கே.வி.கே. பெருமாள், தில்லி தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் சிவபாலமுருகன், பொதுச் செயலர் சத்யா அசோகன், துணைத் தலைவர் மகேந்திரன், வழக்கறிஞர் இந்திய உச்ச நீதிமன்றம் ராம் சங்கர், முனைவர் ரமேஷ், குழந்தை மருத்துவர் உலக சுகாதார நிறுவனம், பத்திரிகையாளர் மீனா வெங்கி, தலைவர் கே.எம்.எஸ். கலை உலகம் முத்துசாமி, கரோலி முன்னாள் கவுன்சிலர் ராஜீவ் வர்மா, ஆகியோர் பங்கேற்று சிறப்பு உரை ஆற்றினார்கள்.

தமிழ் இணைய வழிக் கழகம் சென்னை நடத்திய அயல் வழி மாணவர்களுக்கான போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் & பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழ் இணைய வழிக் கழகம் நடத்திய தமிழ் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ் வகுப்பு மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


முதல் முறையாக தமிழ் பயிலரங்க மாணவர் சர்வேஷ் வரவேற்பு உரையாற்றினார். பொதுச் செயலாளர் தனது உரையில், தில்லித் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் மற்றும் தற்போதைய நிர்வாகக் குழுவினர்களுக்கு மயூர் விஹார் மூன்றாம் கட்டத்தில் தமிழ் நூலகம் அமைக்க உதவுமாறும் கேட்டுக்கொண்டார். மேலும், சில கோரிக்கைகளுடன் , தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர், பொதுச் செயலாளர், துணைத் தலைவர் மற்றும் பொருளாளருக்குக் கடிதம் ஒன்றையும் வழங்கினார். தலைவர் சிங்கதுரை வருடாந்திர உரையாற்றினார். விழா ஏற்பாடுகளை துணைத் தலைவர் கலியபெருமாள், செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் திறம்பட செய்திருந்தனர்.

பாலசுப்பிரமணியன் வழங்கிய நன்றியுரைக்குப்பின் இரவு விருந்துடன் விழா முடிவடைந்தது


- நமது செய்தியாளர் மீனா வெங்கி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us