/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
கொலுப்படி எந்தெந்த பொம்மைகளை எந்த படியில் வைக்கலாம்
/
கொலுப்படி எந்தெந்த பொம்மைகளை எந்த படியில் வைக்கலாம்
கொலுப்படி எந்தெந்த பொம்மைகளை எந்த படியில் வைக்கலாம்
கொலுப்படி எந்தெந்த பொம்மைகளை எந்த படியில் வைக்கலாம்
அக் 02, 2024

கொலுப்படி எந்தெந்த பொம்மைகளை எந்த படியில் வைக்கலாம் என்ற சந்தேகம் பலருக்கும் வருவதுண்டு. வீட்டில் வயதான பெரியவர்கள் குறிப்பாக பெண்கள் இருந்தால் அவர்கள் சொல்லிக்கொடுப்பார்கள். தனிக்குடுத்தனம் என்று வெளியூர் வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
கொலு வைப்பதிலும் விஞ்ஞானத்தை அடிப்படையாக கொண்டு நமது முன்னோர்கள் வழிகாட்டியுள்ளார்கள். கீழேயிருந்து மேலாக ஓரறிவில் தொடங்கி உயர்நிலையுள்ள இறைவன் பொம்மைகள் வைக்கப்படுகின்றன.
முதலாம் படி: ஓரறிவு உயிர்களான புல்,செடி,கொடி போன்ற தாவரங்களின் பொம்மைகள்_
இரண்டாம் படி: ஈரறிவு கொண்ட நத்தை,சங்கு போன்ற பொம்மைகள்.
மூன்றாம் படி: மூன்றறிவு உயிர்களான கரையான்,எறும்பு போன்றவற்றின் பொம்மைகள்._
நான்காம் படி: நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு,வண்டு போன்றவற்றின் பொம்மைகள்.
ஐந்தாம் படி: ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகள்
ஆறாம் படி: ஆறறிவு மனிதர்கள் பொம்மைகள்.எந்த உயிருக்கும் இல்லாத சிந்திக்கும்,சிரிக்கும் சக்தியை இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ளார்.
ஏழாம் படி: மனித நிலையிலிருந்து உயர் நிலைகளை அடைந்த சித்தர்கள், ரிஷிகள், மகரிஷிகள் (ரமணர்,வள்ளலார்) போன்றோரின் பொம்மைகள்.
எட்டாம் படி: தேவர்கள், அட்டதிக்பாலர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள் தேவதைகள் போன்றோரின் பொம்மைகள்.
ஒன்பதாம் படி: பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதி சக்தி வைக்க வேண்டும்.
ஒன்பதாம் படியில் முதலில் விக்னங்களை தீர்த்து வைக்கும் விநாயக பொம்மையை வைத்தப்பிறகு மற்ற மொம்மைகளை வைக்க வேண்டும் என ஆதிபராசக்தி சொல்லி இருப்பதாக 'தேவி பாகவதம்' சொல்கிறது.
அடுத்ததாக , மூம்மூர்த்திகள், 3 தேவியர்களையும் வைக்கலாம். இலட்சுமிக்கும், சரஸ்வதிக்கும் இடையே சக்திதேவியை வைக்க வேண்டும்._
மனிதன் படிப்படியாக தன் ஆன்மீக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவது கொலு படியாகும்.
எல்லோராலும் இடப்பற்றாக்குறை காரணமாக ஒன்பது படிகள் வைக்க முடிவதில்லை.
இருப்பினும் இந்த பாரம்பரியத்தை நினைவு கொண்டு தெய்வங்கள் அடுத்து மகான்கள், பலதொழில் புரியும் மனிதர்கள், அடுத்து விலங்குகள் பறவைகள் என பூங்காக்கள் அமைப்பது அர்த்தமுள்ளதாக இருக்கும்.
கடைசி படியில் குழந்தைகளை பங்கேற்க வைப்பது அவர்களின் கற்பனா சக்தியை ஊக்குவிக்கும். நமது பாரம்பரியமும் அவர்களுக்கு தெரியவரும்.
வரும் நவராத்திரியில் கொலு வைத்து முப்பெரும் தேவியர் அருள் பெறுவோம்.
- நமது செய்தியாளர் மீனா வெங்கி