sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

பிற மாநில தமிழர்

/

புதுடில்லி

/

வரலெட்சுமி விரதம் கொண்டாடுவது ஏன் ?

/

வரலெட்சுமி விரதம் கொண்டாடுவது ஏன் ?

வரலெட்சுமி விரதம் கொண்டாடுவது ஏன் ?

வரலெட்சுமி விரதம் கொண்டாடுவது ஏன் ?


ஆக 09, 2025

ஆக 09, 2025


Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வரலெட்சுமி விரதம் சுமங்கலிப் பெண்கள் கொண்டாடும் சிறப்பான பண்டிகை. இதை தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மக்கள் கொண்டாடுவதை பார்க்கிறோம். வரலெட்சுமி விரதம் ஏன் கொண்டாடப்படுகிறது என்பதை பார்ப்போம்.

செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமியை வீட்டுக்கு வரவேற்கும் நாள்தான் வரலட்சுமி விரத நாள். கணவரின் நீண்ட ஆயுளுக்காக மேற்கொள்ளப்படும் இந்த விரதத்தை மேற்கொண்டு, மகாலட்சுமியை வழிபட்டால் கணவன்-மனையிடைலான மனக்கசப்புகள், கருத்து வேறுபாடுகள் மறைந்து நெருக்கம் அதிகரிக்கும், பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர்வார்கள் என்பது நம்பிக்கை. அவ்வகையில் இந்த ஆண்டு (8.8.2025) வரலட்சுமி விரதம் கொண்டாடப்பட்டது

பூஜைக்கான கலசத்தை மகாலட்சுமி போன்று அலங்காரம் செய்கிறார்கள் மனைப்பலகையில் கும்பம் வைத்து, கும்பத்தில் உள்ள தேங்காயில் அம்மன் முகம், கிரீடம் வைத்து ஆடை அணிகலன்கள் அணிவித்து, மஞ்சள், குங்குமம் வைத்து, பூச்சூட்டி அவரவர் கற்பனைக்கேற்ப அலங்கரிக்கிறார்கள் பின்னர், வீட்டின் வாசலில் வைத்து மகாலட்சுமியை அந்த கலசத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டு வாசலில் உள்நிலைப்படி அருகே நின்று வெளியில் நோக்கி கற்பூர ஆரத்தி காட்டி மகாலட்சுமியை வீட்டுக்குள் வருமாறு அழைத்துச் சென்று பூஜைக்கான இடத்தில் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் அமரச் செய்து பூஜை வழிபாட்டினை அவரவர் குடும்ப வழக்கப்படி செய்கிறார்கள்.

ஆசிபெறுகிறார்கள்

வெற்றிலை, பாக்கு, பழம், நெய் ஊற்றிய சர்க்கரை பொங்கல், சுண்டல் ,அப்பம் என நைவேத்யம் படைத்து ஆரத்தியுடன் நிறைவு செய்கிறார்கள் நோன்புக் கயிறை சாற்றி பூக்களால் அர்ச்சித்து வீட்டு பெண்மணிகள் கட்டிக்கொள்கிறார்கள். வீட்டில் பூஜை செய்ய முடியாதவர்கள், மற்ற வீடுகளில் நடக்கும் பூஜையில் பங்கேற்று அன்னையின் அருள் பெறுவதுண்டு. அன்றைய மாலை சமங்கலிகளை வீட்டிற்கு அழைத்து தாம்பூலம் கொடுத்து ஆசி பெறுகிறார்கள்.அடுத்தநாள் அதாவது சனி மாலை அம்பாளை கலசத்தின் அரிசிப் பானையில் வைத்து ஆரத்தி எடுத்து பூஜையை நிறைவு செய்கிறார்கள்.
- நமது செய்தியாளர், மீனா வெங்கி






      Dinamalar
      Follow us