
'உஞ்சவிருத்தி' என்பது நமது சனாதன பாரம்பரியமாகும், ஒரு பாகவதர் பஜனைகளை பாடுவார், மற்றும் “பிக்ஷாவை” (அரிசி, வெல்லம், மற்றும் துவரம் பருப்பு) ஆகிய பிரசாதங்கள் ஏற்றுக்கொள்வார். 'உஞ்சவிருத்தி' , எளிமை மற்றும் குறைந்தபட்ச வழிமுறைகளை சார்ந்தது, குறிப்பாக 'பிக்ஷா' மூலம் வாழ்க்கை முறையை குறிக்கிறது. இது பொருள் உடைமைகளுக்கு மன நிறைவு, பணிவு மற்றும் இணைக்கப்படாத தத்துவத்தை உள்ளடக்கியது மற்றும் அந்த நாட்களில் பல புனிதர்களுக்கு ஒரு வாழ்க்கை முறையாகும்.
நம்முடைய வளமான பாரம்பரியத்தை மனதில் வைத்து, நொய்டா, செக்டர் 62 ல் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகா ஸ்ரீ கார்த்திகேயா கோவில் வளாகத்தில் வேதிக் பிரச்சார் சன்ஸ்தான் (வி பி எஸ் ) நிர்வாகம் 'உஞ்சவிருத்தி'க்கு ஏற்பாடு செய்தது. இந்த சந்தர்ப்பத்தில் ராமபத்ரன் பாகவதர் பஜனைகளை பாடினார். அவருக்குத் துணையாக வி.விஸ்வநாதனும் பாடினார் . கோவில் உறுப்பினர்கள், ஆர் ராமசேஷன், ராஜு ஐயர், கே ராஜேந்திரன், மட்டுமல்லாமல் ரேணுகா ராமசேஷன், மைதிலி ராமன், கீதா ராமபத்ரன், ஸ்கந்தன், கோயில் வாத்தியார்கள் மணிகண்டன் சர்மா, மோஹித் மிஸ்ரா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்நாளில் கிடைத்த அரிசி, பருப்பு, வெல்லம் அனைத்தையும், போதேந்திரா மடத்திற்கு ராமபத்ரன் அனுப்பி வைத்தார். மற்றும் கிடைத்த சம்பாவனைகளை வி பி எஸ்ஸின் மூன்றாம் ஆண்டு பிரதிஷ்டாதினத்திற்கு அன்பளிப்பாக கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தீபாராதனையுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது.
- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்
