தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/பிற மாநில தமிழர்/பிற மாநிலம்/அயோத்தி ஸ்ரீ காஞ்சி மடத்தில் 25வது அனுஷம் ஜெயந்தி

அயோத்தி ஸ்ரீ காஞ்சி மடத்தில் 25வது அனுஷம் ஜெயந்தி

அயோத்தி ஸ்ரீ காஞ்சி மடத்தில் 25வது அனுஷம் ஜெயந்தி


ஜன 15, 2026

Follow on GoogleFavourite on Google

ஜன 15, 2026


Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்ரீ காஞ்சி சங்கராச்சாரியார் மடத்தின் அயோத்தி கிளை தனது 25வது அனுஷம் பூஜையை ஜனவரி 14, 2026 அன்று நிறைவு செய்தது. ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதியான பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜென்ம நட்சத்திரத்தைக் கொண்டாடும் வகையில் அனுஷம் பூஜை உலகம் முழுவதும் நடத்தப்படுகிறது.


அயோத்தி காஞ்சி மடம் மார்ச் 2024 முதல் அனுஷம் பூஜை செய்யத் தொடங்கியது. மடத்தின் பாடசாலை வித்யார்த்திகள் ஒவ்வொரு மாதமும் பூஜை செய்ய ஆவலுடன் காத்திருந்தனர். இது அவர்களுக்கு ஆன்மிகம் மற்றும் கற்றல் அனுபவமாகவும் இருந்தது. ஒவ்வொரு அனுஷம் பூஜைக்கும், வித்யார்த்திகள் ஸ்ரீ ஸூக்தம், புருஷ ஸுக்தம், ஸ்ரீ ருத்ரம் நமகம், சமகம், தோடகாஷ்டகம், ஸ்ரீ ராம புஜங்க பிரயத்ய ஸ்தோத்திரம் மற்றும் பிற பக்தி ஸ்தோத்திரங்களையும் பாராயணம் செய்தனர்.


மஹாபெரியவா மீது பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் எழுதிய ஸ்ரீ சத்குரு தஷகம் என்ற ஸ்லோகத்தை வித்யார்த்திகள் சிறப்பாக நிகழ்த்தினர். அதைத் தொடர்ந்து ஸ்ரீ மஹா ஸ்வாமிகள் திருவுருவப் படத்தை பாடசாலை வித்யார்த்திகள் பக்தியுடன் ஏந்தியவாறு மடத்தின் உள் பிரகாரத்தை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர்.


அயோத்தி காஞ்சி மடம் ஆண்டு முழுவதும் பல்வேறு வைதீக காரியக்ரமங்களை தவறாமல் செய்து வருகிறது. இது அயோத்தியின் சில தென்னிந்திய வைதீக கலாச்சார மையங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சமீபத்தில் பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 91வது ஜெயந்தி மஹோத்ஸவம் இங்கு கோலாகலமாக கொண்டாடப்பட்டது.


-புதுடில்லியிலிருந்து நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us