/
பிற மாநில தமிழர்
/
பிற மாநிலம்
/
நவி மும்பை தமிழ்சங்கத்தில் அப்துல் கலாம் பிறந்த நாள் கொண்டாட்டம்
/
நவி மும்பை தமிழ்சங்கத்தில் அப்துல் கலாம் பிறந்த நாள் கொண்டாட்டம்
நவி மும்பை தமிழ்சங்கத்தில் அப்துல் கலாம் பிறந்த நாள் கொண்டாட்டம்
நவி மும்பை தமிழ்சங்கத்தில் அப்துல் கலாம் பிறந்த நாள் கொண்டாட்டம்
அக் 14, 2025

மகாராஷ்டிராவின் நவி மும்பை தமிழ்ச் சங்கம், வாஷியில் அப்துல் கலாமின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை 'இளைஞர் திறன் ஊக்குவிப்பு நிழ்ச்சியாக' மிகச்சிறப்பாகக் கொண்டாடியது
விழாவுக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத் தலைவர் வி.நாராயணன் தலைமை வகித்து சிறப்புரை ஆற்றினார். நவி மும்பை சயின்ஸ் பவுண்டேஷனின் தலைவர் அருண். பாகவத் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
அப்துல் கலாமின் புத்தகங்களான அக்னி சிறகுகள் மற்றும் திருப்பு முனைகள் நூல்களின் மதிப்பாய்வு உரைகளை தர்ஷினி வெங்கடேசன், அதர்வா முகுந்த் ஆற்றினர். விழாவையொட்டி மாணவ மாணவியருக்கு சான்றிதழ்களை வி.நாராயணன் வழங்கினார்.
இவ்விழாவில் நவி மும்பை பொறியியல் கல்லூரிகளின் விண்வெளி தொடர்பான 'விண்வெளி வெல்' கண்காட்சி ந்டைபெற்றது. வாஷி மாநகராட்சிப் பள்ளி மாணவ மாணவிகள், பெற்றோர்கள்ஆசிரியர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் திரளாகக் கலந்து கொண்டார்கள்.
- நவி மும்பை தமிழ்ச்சங்கத்திற்காக மீனாட்சி வெங்க்டடேஷ், செயலாளர்