
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழ்ச் சங்கம் சார்பில் நாசிக்கில் ரத்த தான முகாம்
அக்.2ம் தேதி அன்று நாசிக் தமிழ்ச் சங்கம் சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.சங்க தலைவர் ராமமூர்த்தி முகாமை துவக்கி வைத்தார்.தமிழ் மக்கள் மட்டுமல்லாது நாசிக் மக்களும் குருதிக்கொடை அளித்தனர்.நாசிக் மாவட்ட பொதுநல மருத்துவமனையில் இருந்துமெட்ரோ ரத்த வங்கி மூலம் ரத்தம் சேகரிக்கப்பட்டது.மருத்துவ மனையின் முதன்மை மருத்துவ அதிகாரியும், ரத்த அணுக்கள் சம்பந்தப்பட்ட துறை தலைவருமானடாக்டர் சுலோச்சனா காந்தே கலந்து கொண்டு ரத்த தானம் அளித்தவர்களையும் , தமிழ்ச் சங்க செயல்பாடுகளையும் வாழ்த்தினார்.அனைவருக்கும் குருதிக்கொடைக்கான சான்றிதழ் அளிக்கப்பட்டது.