/
பிற மாநில தமிழர்
/
பிற மாநிலம்
/
நவராத்திரி மஹோத்ஸவம் கொண்டாட்டம்
/
நவராத்திரி மஹோத்ஸவம் கொண்டாட்டம்

அயோத்தியில் உள்ள ஸ்ரீ காஞ்சி சங்கராச்சாரியார் மடத்தில் செப்- 22 முதல் அக்-2 வரை நவராத்திரி மஹோத்ஸவம் மிகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் வேத பாராயணங்களுடன் ஸ்ரீ மஹா பெரியவா அனுஷம் ஜெயந்தி பூஜையும் ஆலய பரிக்கிரமமும் இடம் பெற்றது.
பாடசாலை மாணவர்கள் ஸ்ரீ சுக்தம், புருஷ சூக்தம், ருத்ர சூக்தம், விஷ்ணு சஹஸ்ரநாமம், பகவத் கீதை மற்றும் ஸ்ரீ ராம புஜங்கத்தை பாராயணம் செய்தனர். அதைத் தொடர்ந்து ஸ்ரீ மஹா பெரியவர் திருவுருவப் படத்துடன் மேளதாளங்கள் முழங்க கோவில் உள் பிரகாரத்தில் ஊர்வலம் நடந்தது.
மடத்திற்குள் உள்ள காமாக்ஷி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட சன்னிதியில் தினசரி சிறப்பு பிரசாதங்கள் சமர்ப்பித்து, சரஸ்வதி பூஜை மற்றும் ஆரத்திகள் நடைபெற்றன.
பாடசாலை வித்யார்த்திகள் தேவி மகாத்மியம், மற்றும் ஸ்ரீ துர்கா மாதாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்தனர்.
- புதுடில்லியிலிருந்து நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்