sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

பிற மாநில தமிழர்

/

பிற மாநிலம்

/

ஸ்ரீ பரஞ்ஜோதி யோகா கல்லூரி ஆண்டு விழா

/

ஸ்ரீ பரஞ்ஜோதி யோகா கல்லூரி ஆண்டு விழா

ஸ்ரீ பரஞ்ஜோதி யோகா கல்லூரி ஆண்டு விழா

ஸ்ரீ பரஞ்ஜோதி யோகா கல்லூரி ஆண்டு விழா


ஏப் 12, 2023

ஏப் 12, 2023


நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலை தென்கயிலை ஸ்ரீ பரஞ்ஜோதி யோகா கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா ஏப்ரல் 9 ஆம் தேதி கல்லூரி வளாகம் பதஞ்சலி மகரிஷி அரங்கில் தத்துவ தவ உயர்ஞான பீடாதிபதி - பிரணவாலயப் பேராசான் ஜெகத்குரு மகா மகரிஷி குருமகான் பரஞ்ஜோதியார் அருளாசியோடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஒரு நிமிட அமைதியோடு குரு கீதம் – தமிழ்த்தாய் வாழ்த்து – தேசிய கீதம் தொடர விழா கோலாகலமாகத் தொடங்கியது. 

குருமாதா தலைமையில் ஞானாசிரியைகள் அஷ்ட தீபம் ஏற்ற அடுத்த நிகழ்வு தொடர்ந்தது. குருமகான் பரஞ்ஜோதியார் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலரும் ஈரோடு அக்னி ஸ்டீல்ஸ் நிர்வாக இயக்குநருமான கே.தங்கவேல் தலைமை ஏற்றார். தாளாளர் எஸ்.செங்குட்டுவன் – பள்ளிபாளையும் பல்லவா குழும இயக்குநர் வி.எஸ்.பழனிசாமி – ஆர்.டி. தங்கவேல் – உடுமலை ஏ. மூர்த்தி – திருமூர்த்தி முதலியோர் முன்னிலை வகித்தனர். 

பொள்ளாச்சி தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் கே.சண்முகசுந்தரம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ – மாணவியருக்குப் பரிசு வழங்கிச் சிறப்பித்தார். தென்னை வாரிய உறுப்பினராகப் பொறுப்பேற்றதற்கு ஆலய சார்பில் பாராட்டி வாழ்த்தப்பட்டது. சிறப்பு விருந்தினர்களுக்குத் தாளாளர் செங்குட்டுவன் – பொருளாளர் ஆர்.வி.எஸ்.செந்தில்குமார் ஆகியோர் பயனாடை அணிவித்து கவுரவித்தனர். 

மாணவர்களுக்குச் சிறப்பாகப் பயிற்சி அளித்த பேராசிரியர் வெங்கடேஷ் கவுரவிக்கப்பட்டார். யோகா கல்லூரி மாணவ – மாணவிகளின் யோகா நிகழ்வுகள் பிரம்மிக்க வைத்தன. ஒவ்வொரு நிகழ்வும் அரங்கு அதிருமாரு கரவொலி பெற்றது. உதவிப் பேராசிரியர் எம் சிவசுப்பிரமணியம் நன்றி நவில விழா இனிதே நிறைவு பெற்றது. முன்னதாக கல்லூரி கல்வி இயக்குநர் முனைவர் புனிதவள்ளி வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி நிர்வாகம் ஏற்பாடுகளை மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.

- தினமலர் வாசகர் : க.து.அம்மையப்பன்






      Dinamalar
      Follow us