sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

பிற மாநில தமிழர்

/

பிற மாநிலம்

/

ஓருலக சமதர்ம கூட்டாட்சி ( இறையாட்சி ) மலர்வது உறுதி: மகரிஷி பரஞ்ஜோதியார்

/

ஓருலக சமதர்ம கூட்டாட்சி ( இறையாட்சி ) மலர்வது உறுதி: மகரிஷி பரஞ்ஜோதியார்

ஓருலக சமதர்ம கூட்டாட்சி ( இறையாட்சி ) மலர்வது உறுதி: மகரிஷி பரஞ்ஜோதியார்

ஓருலக சமதர்ம கூட்டாட்சி ( இறையாட்சி ) மலர்வது உறுதி: மகரிஷி பரஞ்ஜோதியார்


மே 08, 2023

மே 08, 2023


நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

 

“ ஞானமும் அரசியலும் ஒன்றுபட்ட அன்றே உலக சமாதானம்.. ஒரே இறை – ஒரே நாணயம் – எந்நாட்டு விளைவானாலும் எல்லோரும் நிர்வகிக்கும் நிர்வாகம் – உலக முழுவதற்குமான ஒரே பாராளு மன்றம் அமையும் “ எனப் பல ஆண்டுகளுக்கு முன்னே ஜெகத்மகா குரு – குண்டலினி மூல குரு ஞானவள்ளல் பரஞ்ஜோதி மகான் கூறினார். இப்போது காலம் கனிந்திருக்கிறது. பாரதம் உலக நாடுகளுக்கு ( ஜி 20 ) த் தலைமை ஏற்று வலிமையான பாரதம் – வளமான தமிழகம் – அமைதியான உலகம் மலரும் “ என திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த தென்கயிலை உலக சமாதான அறக்கட்டளை நிறுவநர் தத்துவ தவ ஞானி – பிரணவாலயப் பேராசான் ஜெகத்குரு மகா மகரிஷி குருமகான் பரஞ்ஜோதியார் ஆகஸ்டு 7 ஆம் தேதி திருமூர்த்தி மலை ஞான பீடத்தில் நடைபெற்ற ஞானவள்ளல் பரஞ்ஜோதி மகான் 123 ஆவது ஜெயந்தி விழா ( ஞானியர் தினம் ) வில் அருளுரை ஆற்றுகையில் குறிப்பிட்டார். 

அவர் மேலும் பேசுகையில், ' சற்குருவே சரணம் சந்தோஷம். நீ அந்த சத்தியம் தான் மெய்ப்பொருள் உன்னை நீ உணர்ந்தால் நீ வேறு, குடும்பம் வேறு அல்ல. உன்னை நீ உணர்ந்தால் நீ வேறு, இந்த சமுதாயம் வேறு அல்ல. உன்னை நீ உணர்ந்தால் நீ வேறு, தேசம் வேறு அல்ல. உன்னை நீ உணர்ந்தால் நீ வேறு, இந்த உலகம் வேறு அல்ல. ஆகவே உலகத்தில் இருக்கின்ற மக்கள் இதற்கு பெயர் என்ன சொன்னார்கள் மனிதநேயம் உலகத்தில் இருக்கின்ற அத்தனை உயிர்களின் மீதும் நேசம் அது ஆன்ம நேயம் எல்லோரும் ஒன்று கண்ணோட்டம் ATTITUDE   எல்லோரும் ஒன்று எல்லாம் ஒன்று நினைத்தால் எப்படி இருக்கும் சொல்லுங்கள்.

'எங்களுக்கு உலக சமாதான ஆலயம் என்ன சொல்லிக் கொடுத்திருக்கிறது ஒரு மந்திரம் சொல்லிக் கொடுத்திருக்கிறது OK மந்திரம். நீ எதை செய்தாலும் சரியாகத்தான் செய்வாய், இதுவரைக்கும் நாங்கள் உன்னை நீயே தேர்ந்தெடுத்தாய் சரியாக இருந்தது. நீ தேர்ந்தெடுத்த எல்லாமே சரியாகத்தான் இருந்தது, அதனால் தான் இதுவும் சரியாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் முதலில் OK, அதன் பிறகு பார்த்து எல்லாம் சரியாக இருந்தால்OK, எடுத்த உடனே ABJECTION, NO என்று சொல்லக்கூடாது. யாருடைய மனதையும் புண்படுத்தாமல் எண்ணத்தில் உண்மையும் சொல்லில் வாய்மையும் செயலில் நேர்மையும் பயன்படுத்துங்கள்.

'எதற்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை, அதற்கு தான் அன்பு உண்மை, துணிவு, அன்பாயிரு, உண்மையாயிரு, துணிவாயிரு. துணிவு தான் ரொம்ப முக்கியம், பாரதத்தில் மட்டும் வந்த துணிவு இருந்தால் இருந்திருந்தால் இந்த பாரதம் அடிமைப்பட்டு இருக்க வேண்டிய அவசியமே இல்லை. அன்பு இருந்தது, உண்மை இருந்தது, எல்லோரும் நல்லவர்களாக இருந்தார்கள், ஆனால் என்ன வேண்டும் துணிவு, அந்த துணிச்சல் ஆகவே தான் இந்த துணிச்சலை பெறுகின்ற காலம் வந்துவிட்டது. 

'இன்று உலகம் முழுவதும் எல்லா நிலைகளிலும் இந்த கோவிட் எல்லோரும் நினைத்தார்கள். சீனா இப்படி இருக்கிறப்போ, உலகம் முழுவதும் பரவிக் கொண்டு வருகின்ற பொழுது எல்லோரும் பயந்தார்கள், அத்தனை பேரும் காட்டுமிராண்டிகள், படிக்காதவர்கள், சுத்தம் இல்லாதவர்கள் அப்படியெல்லாம் நினைத்தார்கள். அதனால் இந்த கோவிட் நிச்சயம் இந்தியாவை ஒரு பெரிய பாதிப்புக்கு உண்டாக்கும் என்று எண்ணினார்கள். கடைசியில் பார்த்தால் இந்த பாரதத்தை, பாரதத்தில் உள்ள ஆன்மீகம் உலகத்திற்கே இந்த தடுப்பூசியை கண்டுபிடித்து, உலகிற்கே கொடுக்கக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தியது.

அதுபோல் இன்று G-20 எல்லா நாடுகளையும் இந்தியா தான் வழிகாட்ட வேண்டும். இன்று உலகத்தில் எந்த நாடுகள் சண்டை போட்டாலும், முதலில் போய் அந்த இரண்டு நாட்டையும் இணைத்து வைக்க ஒரு பக்கமாக சாய்ப்பதற்காக அந்த நாட்டிற்கு ஆயுதத்தை கொடுத்தால் அமைதி ஏற்படாது, ஆயுதத்தை கொடுத்தாலே பிரச்சனை தான் வரும், ஆயுதங்களை கொடுத்தாலே பிரச்சனைதான் வரும், என்றும் சமாதானம் ஆக முடியாது, 

' இந்தியாவில்  ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையில் சேமித்து வைத்துள்ளார்கள். வீட்டில் எல்லோரும் ஒவ்வொரு லட்சுமிகள் மகாலட்சுமிகள் எந்த இடத்தில் கை வைத்தாலும் காசு வரும் 

'நாள்தோறும் ஞான பீடத்தில் “ வளர்க மெய்ஞானம் – வாழ்க சமாதானம் – உலக நலம் காப்போம் – உலக அமைதி காப்போம் – இறையருளால் சத்திய யுகம் காப்போம் “ என பிரதிக்கினை எடுத்துக் கொள்ளுகிறோம். இன்னும் ஏழு ஆண்டுகளில் 2030 – இல் ஓருல சமதர்ம கூட்டாட்சி மலரும்.

“ இறைவன் தூணாகவும் இருக்கிறார் – துரும்பாகவும் இருக்கிறார். அங்கு இங்கு எனாதபடி நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிறார் உன்னுள்ளும் இருக்கிறார் எனத் தொட்டுக் காட்டியவர் ஞான வள்ளல்.. நான் ஒருவன் நரகத்திற்குப் போனால் பரவாயில்லை மற்றவர்கள் எல்லோரும் சொர்க்கத்திற்குச் செல்லட்டும் எனக் கோபுரத்தின் மேலேறிக் கூவி அழைத்து எல்லோருக்கும் வழிகாட்டிய ராமானுஜரைப் போல தம் குரு நல்லவர்களாகப் பார்த்து உபதேசம் செய் என்ற போது “ நான் ஏன் நல்லவர்களைத் தேடிப் போக வேண்டும் – எல்லோரையும் நல்லவர்களாக்கி விடுகிறேன் என மூலதாரத்து மூண்டெழு கனலைக் காலால் அடக்கும் கலையை எளிமையாக்கி எல்லோருக்கும் ஞானத்தை வாரி வழங்கியவர் ஜெகத்மகா குரு. கொடுத்து சோதித்தவர்.. முன்னர் ஆச்சாரியர்களுக்கும் – ஆதீன கர்த்தர்களுக்கும் மட்டுமே உபதேசித்த முறையைத் தகர்த்தெறிந்து ஞானத்தைப் பொதுவுடைமை ஆக்கிய ஞானவள்ளல் கனவு நிச்சயம் மெய்ப்படும் ‘” 

இவ்வாறு  அமெரிக்கா – மலேசியா – சிங்கப்பூர் – ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாடுகள் மற்றும் திரளாகக் கலந்து கெண்ட தமிழகச் சீடர்களிடையே உரையாற்றுகையில் குருமகான் குறிப்பிட்டார். விணையும் பயனும் விளைந்தே தீரும் என்றார். கலி யுகம் மறைந்து சத்திய யுகம் மலரும் நாள் தொலைவில் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

விழா ஒரு நிமிட அமைதியோடு துவங்கியது. தொடர்ந்து ஞான கீதம் – குரு கீதம் – தேசிய கீதம் – தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்க விழா களை கட்டியது. குருமாதா தலைமையில் அஷ்ட தீபம் ஏற்றப்பட்டு அடுத்த நிகழ்வு மலர்ந்தது. பொதுச் செயலர் ஞானாசிரியர் கே.எஸ் சுந்தரராமன் வரவேற்புரை ஆற்றுகையில் ஞான வள்ளல் வரலாற்றை உருக்கத்தோடு எடுத்துரைத்து அரங்கத்தை தெய்வீகமாக்கினார். பிரபல ஏழுத்தாளர் இந்திரா சௌந்திர ராஜன் தமது 60 நிமிட உரையில் அரங்கத்தைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். 

பிற்பகல் நிகழ்வில் உலக சமாதான ஆலயத்தைச் சேர்ந்த மெய்ஞானாசிரியர் என்.சோமசுந்தரம் – மலேசிய உலக சமாதன ஆலய மேனாள் தலைவர் டாக்டர் சரசிஜெம் – சிங்கப்பூர் மூத்த பத்திரிகையாளர் வெ.புருஷோத்தமன் – வட அமெரிக்க உலக சமாதான அறக்கட்டளையைச் சேர்ந்த என் ஜெயராமன் – ஜெர்மனி உலக சமாதான அறக்கட்டளையைச் சேர்ந்த ஆர் விஜய் ஆகியோர் உரையாற்றினர். 

விழாவில் அகில உலக நல்லாட்சி இயக்கத்தைச் சேர்ந்த குமரேசன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். அறக்கட்டளை அறங்காவலர் சென்னை சில்க்ஸ் நிர்வாக இயக்குநர் கே. விநாயகம் தலைமையில் நடைபெற்ற விழாவில் பெருந்திரளான குருமகான் சீடர்கள் பங்கேற்றனர் சிவகாசி மெய்ஞானாசிரியர் எம்.திருப்பதி ராஜா நிகழ்வினைச் சுவைபட நெறிப்படுத்தினார். 

தொடக்க நிகழ்வாக கோவை ராயல் கேர் மருத்துவ மனை இயக்குநர் டாக்டர் மாதேஸ்வரன் தலைமையில் நடைபெறும் ஒரு கோடி மரம் நடும் இயக்கத்தின் சார்பாக ஆலயத்தில் சர்வ தேசப் பிரதிநிதிகள் மற்றும் ஞானாசிரியப் பெருமக்கள் குருமகான் தலைமையில் மரக் கன்று நட்டனர். குருமகான் பங்கேற்ற அனைவரையும் தனித்தனியே ஆசி அளித்து மகிழ்வித்தார்.

- திவமலர் வாசகர் : க.து.அம்மையப்பன் 






      Dinamalar
      Follow us