/
பிற மாநில தமிழர்
/
பிற மாநிலம்
/
எழுத்தாளர் சிவசங்கரிக்கு 'விஸ்வம்பரா விருது': தெலுங்கானா முதல்வர் வழங்கினார்

ஜூலை 31, 2024

ஐதராபாத்தில் உள்ள ரவீந்திர பாரதி விழா அரங்கில் நடைபெற்ற விழாவில், எழுத்தாளர் சிவசங்கரிக்கு, இந்திய அளவில் வழங்கப்படும் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான விஸ்வம்பரா சி.நாராயண ரெட்டி விருதை தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி வழங்கினார்.
தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர் சிவசங்கரி. 36 நாவல்கள், 48 குறுநாவல்கள், 150 சிறுகதைகள், பயணக் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், தொகுப்பு நூல்கள் என அவர் தமிழுக்குச் செய்த பங்களிப்புகள் ஏராளம். சரஸ்வதி சம்மான் உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றவர்.
இவ்விழாவில் தெலுங்கானா தமிழ்ச்சங்கத்தின் சார்பாக தலைவர் போஸ், துணைத்தலைவர் தருமசீலன், பொதுச்செயலாளர் ராஜ்குமார் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு எழுத்தாளர் சிவசங்கரியின் சீரிய பணிகள் மேலும் தொடரவும் பல உயரிய விருதுகள் பெற பாராட்டு தெரிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.