sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

பிற மாநில தமிழர்

/

பிற மாநிலம்

/

நாமசங்கீர்த்தனம் / பஜன்

/

நாமசங்கீர்த்தனம் / பஜன்

நாமசங்கீர்த்தனம் / பஜன்

நாமசங்கீர்த்தனம் / பஜன்


ஜூலை 06, 2024

ஜூலை 06, 2024


Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரம்பொருளான இறைவனை அடைய அவனிடம் பக்தி செலுத்த பல வகைகள் உண்டு. அவற்றுள் முக்கியமான வழி, இறைவனின் திருநாமத்தைச் சொல்லிப் பாடுவது. இதை 'திவ்ய நாம சங்கீர்த்தனம்' என்பர். கலியுகத்தில் நாம சங்கீர்த்தனம் ஒன்றே மிகச்சிறந்த வழி. 'நாம சங்கீர்த்தனம்' பெரிய பயன்கள் அளிக்க வல்லது மற்றும் நாம சங்கீர்த்தனத்தின் பெருமையை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது' என்பர்.
கலியுகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மார்க்கத்தில் பஜனை அல்லது நாம சங்கீர்த்தனம் என்று அழைக்கப்படும் மிக உயர்ந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இது மனதை ஒருமுகப்படுத்த உதவுகிறது மற்றும் இறுதியில் அமைதியைக் கொண்டு வருகிறது.

பஜனைகள் பல ஆண்டுகளாக பல்வேறு முறைகளுடன் உருவாகியுள்ளன. இவை பத்தாதிகள் எனப்படும். வலங்கைமான் வட்டம், ஆலங்குடி நாமசங்கீர்த்தனம் (குருஸ்தலம், கும்பகோணத்திற்கு அருகில்), மிகவும் பிரபலமானது மற்றும் உலகப் புகழ் பெற்றது. நாமசங்கீர்த்தனத்தை உலகம் முழுவதும் பிரபலப்படுத்த 'ஆலங்குடி நாமசங்கீர்த்தன டிரஸ்ட்' அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒவ்வொரு ஏகாதசியன்று நாமசங்கீர்த்தனம் நடத்தி வருகின்றனர்.


ஜூலை 2, யோகினி ஏகாதசியன்று சென்னையைச் சார்ந்த கானஸ்ம்ருதி பஜன் மண்டலியினர் சம்பிரதாய நாமசங்கீர்த்தனம் காலை 9.15 மணிக்கு வலை ஒளி காணொளி மூலம் துவங்கியது. மண்டலி செயல்பாடு குறித்து அமைப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களால் (நிகழ் நிலை மற்றும் ஆஃப்லைனில்) மிகவும் பாராட்டப்பட்டது. ஜெயதேவரின் கீத கோவிந்தத்தில் இருந்து 10வது அஷ்டபதியை வழங்கும் வாய்ப்பு குழுவினருக்கு கிடைத்தது.


உடையாளூர் ஸ்ரீ கல்யாணராமன் பாகவதர், அஷ்டபதியை வழங்கும் போது பின்பற்றப்பட்ட பிராசீன பத்ததியைப் பற்றி மிகவும் சிறப்பாகக் குறிப்பிட்டுப் பாராட்டினார். புல்லாங்குழல், ஆர்மோனியம், மிருதங்கம் மற்றும் டோலக் வாசித்த கலைஞர்களுக்கு அதிக பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மண்டலியின் பாடல் தேர்வு முறையை குறித்தும் ஏற்பாட்டாளர்கள் சிறப்புரையாற்றினர். இதற்கு உடனடி அங்கீகாரமாக, 2026 ஆம் வருடம் காலண்டர் ஆண்டில் 'ஆலங்குடி ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்ஸவத்தின்' ஒரு பகுதியாக கானஸ்ம்ருதி பஜனை மண்டலிக்கு நிகழ்ச்சி நடத்த அழைப்பு விடுக்கபட்டுள்ளது.


ஆலங்குடி ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்ஸவம் 1948 முதல் இடைவேளையின்றி நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் நடத்தப்படுகிறது. இது அனைவரையும் மயக்கும் ஒரு நாமசங்கீர்த்தன விழாவாகும்.


- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்







      Dinamalar
      Follow us