/
பிற மாநில தமிழர்
/
பிற மாநிலம்
/
தெலுங்கானா தமிழ்ச் சங்கக் குழு ஆளுநருடன் சந்திப்பு
/
தெலுங்கானா தமிழ்ச் சங்கக் குழு ஆளுநருடன் சந்திப்பு
தெலுங்கானா தமிழ்ச் சங்கக் குழு ஆளுநருடன் சந்திப்பு
தெலுங்கானா தமிழ்ச் சங்கக் குழு ஆளுநருடன் சந்திப்பு
ஜூலை 02, 2024

தெலுங்கானா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனைத் தெலுங்கானா தமிழ்ச்சங்க நிர்வாகிகள் சந்தித்தனர். , எம்.கே. போஸ் (தலைவர்), பி.தரமசீலன் (துணைத் தலைவர்), எஸ்.ராஜ்குமார் (பொதுச் செயலர்), என்.நேரு சாஸ்திரி (பொருளாளர்), டி.குமாரராஜன் (துணைப் பொருளாளர்) ஆகியோர் ஆளுநரிடம் நினைவுச் சின்னம் வழங்கினர்.
ஹைதராபாத்தில் உள்ள தமிழர்களுக்கான கலாச்சார, கல்வி மற்றும் போக்குவரத்து மேம்பாட்டை வலியுறுத்தி மனு கொடுத்தனர். தமிழ் கலாச்சாரத்தை மேம்படுத்துவதிலும், சமூகத்தின் தேவைகளை நிவர்த்தி செய்வதிலும் தெலுங்கானா தமிழ்ச் சங்கத்தின் முயற்சிகளுக்கு ஆளுநர் ராதாகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்தார். தூதுக்குழுவினரின் கோரிக்கைகள் உரிய முறையில் பரிசீலிக்கப்படும் என்று உறுதியளித்த அவர், இந்த குறைகளை நிவர்த்தி செய்வது குறித்து பரிசீலிப்பதாக உறுதியளித்தார்.
ஆளுநர் தங்களைச் சந்திக்க நேரம் ஒதுக்கியதற்கும், கோரிக்கைகளை பரிசீலிக்க ஒப்புக் கொண்டதற்கும் தெலுங்கானா தமிழ் சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.