வரும் ஜன-22ல் அயோத்தி ராமர் கோயிலில் கும்பாபிஷே கம் கோலாகலமாக நடக்க உள்ளது. அயோத்தி நகர் முழுவதும் குரங்குகள் உலா வந்து கொண்டிருக்கிறது. இது இந்நகருக்கு கூடுதல் அழகு .
கனமழை காரணமாக மும்பையில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. வேறு வழியில்லாத நிலையில், மும்பை சி.எஸ்.டி., ரயில் நிலையத்தில் வேதனையுடன் காத்திருக்கும் பயணிகள்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா ஏழாம் நாள் தேரோட்டத்தில் விநாயகர் தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவின் 6ம் நாள் காலை உற்சவத்தில் 63 நாயன்மார்கள் விமானங்களை அண்ணாமலையாருக்கு அரோகரா என கோஷத்துடன் பள்ளி மாணவர்கள் தோழில் சுமந்தபடி மாட வீதி உலா வந்தனர்.
பிரம்ம குமாரிகள் அமைப்பின் கலை பண்பாட்டுதுறை சார்பில் உலகளாவிய கலாச்சாரம் அன்பு அமைதி நல்லிணக்கம் என்ற திட்டத்தினை இயக்குனர் பாக்கியராஜ் மற்றும் பிரம்ம குமாரிகள் அமைப்பின் கலைப் பண்பாட்டு துறை தலைவர் சந்திரிகா தீதீஜி ஆகியோர் துவக்கி வைத்தனர்