லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையொட்டி முன்கூட்டியே இனிப்புகளை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள பா.ஜ.,வினர்., இடம்: பாட்னா , பீஹார்.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சார்பில், தேசிய கண் தான வார விழாவை முன்னிட்டு, மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மனித சங்கிலி நடத்தினர்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பக்தர்களுக்கு இடையூறு இன்றி நடைபாதை வியாபாரிகளுக்கு 20 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, மூன்று வண்ணக் கோடுகள் அமைக்கும் பணியை தொடங்கிய மாநகராட்சி ஊழியர்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம், மணியாரகுப்பம் கூட்ரோடு பகுதி பொதுமக்கள் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல் ஈடுப்பட்ட பெண்கள்.
கனமழை காரணமாக மும்பையில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. வேறு வழியில்லாத நிலையில், மும்பை சி.எஸ்.டி., ரயில் நிலையத்தில் வேதனையுடன் காத்திருக்கும் பயணிகள்.