புதுச்சேரி எல்லப்பிள்ளை சாவடி ஸ்ரீ சிருங்கேரி சாரதாம்பாள் கோயிலில் 51 ஆம் ஆண்டு சாரதா நவராத்திரி விழாவை முன்னிட்டு ஸ்ரீ பக்த மீரா குழுவினரின் இசை நிகழ்ச்சி நடந்தது.
நவராத்திரியை முன்னிட்டு, வடபழநி ஆண்டவர் கோவிலில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவின் மூன்றாம் நாளில் அன்னபூரணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்த அம்மன்.
நவராத்திரி திருவிழாவையொட்டி கோவை சித்தாபுதூர் அயப்பன் கோவிலில் நடந்த மயூரி கல்ச்சுரல் ஆர்ட்ஸ் குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சி பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.
துர்கா தேவி பூஜை, ஸ்ரீ துர்கா பூஜா சேவா சமிதி சார்பில் திருப்பூர் ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நடந்து வருகிறது. சிறப்பு அலங்காரத்தில் துர்கா தேவி உள்ளிட்ட சுவாமிகள்.