சவுதி அரேபியாவில் உள்ள மதீனா அருகே பஸ்-டேங்கர் லாரி மோதிய விபத்தில், முகமது அப்துல் ஷோயப்,24, என்ற இளைஞர் மட்டும் தப்பியுள்ளார். இவர் டிரைவர் அருகே அமர்ந்து இருந்தார். தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்ததால், காயத்துடன் தப்பினார்.
சவூதி அரேபியாவின் மதீனாவில், ஹைதராபாத்தில், இந்திய உம்ரா யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில், பாதிக்கப்பட்ட ஒருவரின் உறவினருக்கு தெலுங்கானா சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முகமது அசாருதீன் ஆறுதல் தெரிவித்தார்.