அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் சென்னை மயிலாப்பூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவரது பிரசார வேனின் பக்கவாட்டில் துண்டு கட்டி அதை பிடித்து தொங்கிக் கொண்டே சென்ற தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலர் அசோக் மற்றும் முன்னாள் அமைச்சர் உதயகுமார்.
கோவை கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட மலுமிச்சம்பட்டி நால்ரோடு சந்திப்பில் தி.மு.க., வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி பிரச்சாரம் மேற்கொண்டார்.