அப்பாஸ் கல்சுரல் அமைப்பின், 32வது கலைவிழா சென்னை தேனாம்பேட்டையில் துவங்கியது. இதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவனுக்கு, லட்சுமி பெயின் அண்ட் பேலியேடிவ் கேரின் அறங்காவலர் தயாளன் சவுந்தர்ராஜன் மற்றும் அப்பாஸ் கல்சுரல் ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் நினைவு பரிசை வழங்கினர். உடன் ஸ்ரீராம் ஐ.பி.எஸ், ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் மற்றும் பரதநாட்டிய கலைஞர் அனிதா குஹா.
உடுமலை ஸ்ரீ வர்ஷினி டிவிஎஸ் நிறுவனத்தின், 36வது ஆண்டு விழாவை முன்னிட்டு, 3 நாட்கள் நடந்த கலை மற்றும் பண்பாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில், ஸ்ரீ வர்ஷினி நிர்வாக இயக்குனர் இளங்கோ, இணை நிர்வாக இயக்குனர் அருண் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கர்நாடகாவின் ஷிவமொக்காவில் மகிளா தசரா விழா மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.பெண்களின் திறமைகளை ஊக்குவிக்கவும், சமுதாயத்தில் அவர்களின் பங்களிப்பைக் கவுரவிக்கவும் நடத்தப்படும் இந்த நிகழ்வில் பெண் கலைஞர்கள் மட்டுமே பங்கேற்பர்.அவர்களின் நாட்டுப்புற கலை வடிவமிது.
புதுச்சேரி சாய் ப்ரைமஸ் பயோ டெக் லிமிடெட் நிறுவனர் சீனிவாசன் பிறந்தநாளை முன்னிட்டு, முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவருக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.