உ.பி., மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா வருகின்ற 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழை தினமலர் வெளியீட்டாளர் எல். ஆதிமூலத்திற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பாளர்களால் சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று வழங்கப்பட்டது., இடமிருந்து நகர ஆர்எஸ்எஸ்,, செயலாளர் ராம்குமார், மாநில ஊடகத்துறை பொறுப்பாளர் நரசிம்மன், நகர செயலாளர் சுதர்சன் ஆகியோர்.
சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில் புதியதாக திறக்கப்பட்டுள்ள லு லு தினசரி சூப்பர் மார்கட்டை சபாநாயகர் ஜே.சி.பி.,பிரபாகரனுக்கு , லுலு மார்க்கெட் குழுமத்தின் தலைவர் யூசப் சுற்றிக் காண்பித்தார்
தன் சிறகுகளை விரித்து மகிழும் இந்த பறவையைப் போல, மனிதனும் கவலைகளை மறந்து வாழ ஒரு இடம் தேடுகிறான்... ஆனால் வாழ்க்கை எல்லோருக்கும் அந்த சந்தர்ப்பத்தை தருவதில்லை. இடம்: கோவை செட்டிபாளையம்
கிண்டி ரயில் நிலையத்தில் நடைமேடை மற்றும் மேற்கூரை பணிகள் அரைகுறையாக முடிக்கப்பட்டு இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் இருப்பதால் வெயிலில் அவதிப்படும் பொதுமக்கள்.இடம் : கிண்டி
கொச்சின் ஷிப்ட்யார்ட் லிமிடெட் நிறுவனத்தால் கட்டப்பட்ட மூன்றாவது நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ் மங்களோர்,இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. இடம்:மும்பை,மகராஷ்ட்ரா