. சொக்கா இதென்ன சோதனை...:மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்லும் முக்கிய வழியான கீழ ஆவணி மூல வீதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி பல நாட்களாக தேங்கியுள்ளதால் பக்தர்கள் இதனை மிதித்து கோயிலுக்குள் செல்லும் நிலை தொடர்கிறது.
விழுப்புரத்தில் தினமலர் - பட்டம் இதழ் சரஸ்வதி சென்ட்ரல் சிபிஎஸ்இ பள்ளி வி.பாளையத்தில் இணைந்து நடத்திய வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்க ஆர்வமுடன் வந்தனர்.
மகாத்மா காந்தியின் பிறந்தநாள் முன்னிட்டு சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு கீழ் வைக்கப்பட்ட படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
விஜயதசமியை முன்னிட்டு தினமலர் நாளிதழ் சார்பில் குழந்தைகளுக்கு "அ"னா "ஆ"வன்னா எழுத கற்றுத்தரும் அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி மதுரை இம்மையில் நன்மை தருவார் கோவிலில் நடந்தது.
தாயின் அரவணைப்பை விட சிறந்த பாதுகாப்பு எதுவுமில்லை என்பது போல, குட்டிகளை அணைத்து கூட்டு குடும்ப உன்னதத்தை உணர்த்தும் குரங்கு குடும்பம். இடம்: ஆழியாறு ரோடு.
விஜயதசமி முன்னிட்டு, கோவை ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தில் தினமலர் நாளிதழ் சார்பில் குழந்தைகளுக்கு 'அ'னா, 'ஆ'வன்னா எழுத பயிற்றுவிக்கும் அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி நடந்தது .
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொடுந்திரப்புள்ளி ஆதிகேசவ புரம் ஐயப்பன், ஆதிகேசவ பெருமாள் கோவிலில் மகாநவமி நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு, 15 யானைகளின் அணிவகுப்பில் முத்துமணி வண்ண குடைகள் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.