வந்தே மாதரம் பாடலின் 150 ஆவது வரும் நிறைவடைந்ததை முன்னிட்டு, சென்னை விமான நிலையத்தின் ஊழியர்கள் மற்றும் தொழில் பாதுகாப்பு படையினர் வந்தே மாதரம் பாடலை பாடினர்.
ஊட்டி பந்தலூரில் இருந்து சேரம்பாடி செல்லும் சாலையில், சேரம்பாடி மின்வாரிய எதிரே பயணிகள் நிழற்குடை புதருக்குள் மறைந்துள்ளதால், பயணியருக்கு பயன் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
மஹாராஷ்டிராவின் நவி மும்பையில் உள்ள பழைய இரும்பு பொருட்கள் சேமிப்பு கிடங்கில் பிடித்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள். இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றாலும், பெருத்த பொருட் சேதம் ஏற்பட்டது.