பல்லாவரம் - குன்றத்தூர் சாலையில் குண்டும் குழியுமாக கிடக்கும் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளதால் பள்ளத்தில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகள் இடம்: அனகாபுத்தூர்
டில்லி குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் செயற்கை நுண்ணறிவு வசதியுடன் கூடிய கட்டுப்பாட்டு அறையை, நீர்வளத்துறை அமைச்சர் பர்வேஷ் சிங் வர்மா நேற்று தொடங்கி வைத்தார். பொதுமக்களின் புகார்களுக்கு நடவடிக்கை எடுத்தல், குடிநீர் குழாய்கள் மற்றும் தண்ணீர் டேங்கர் லாரிகளை கண்காணித்தல் ஆகிய பணிகளை இந்த நவீன கட்டுப்பாட்டு அறையில் இருந்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
மழைநீர் சேகரிப்பு தொடர்பாக கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலை பள்ளியில் மாணவிகள் தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து நாடகம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற என்.ஆர்., காங்., அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ.,சட்டசபையில் தற்காலிக சபாநாயகர் அன்பழகன் அறையில் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டார்.