மாட்டுப் பொங்கல் பண்டிகையை ஒட்டி கோவை தடாகம் ரோட்டில் உள்ள மாதேஸ்வரன் கோவிலில் வளர்ப்பு கால்நடைகளை அழைத்து வந்து பூஜை செய்தனர். அடுத்த படம் கால்நடைகளை பார்க்க வந்த கூட்டம்
பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு மதுரை மங்கையர்க்கரசி கல்லுாரியில் நடந்த பூமியை வாழவைப்போம் நுால் வெளியீட்டு விழாவில் கல்வி குழும தலைவர் அசோக்குமார் பேசினார். இடமிருந்து பேராசிரியை ரேணுகா தேவி, நுாலாசிரியர் திருமலை, ராஜேந்திரன், நுால் வெளியீட்டாளர் ராம சுப்பிரமணியன், பாலு.
தமிழக அரசு சார்பில், டில்லி ரபி மார்க் கான்ஸ்டிடியூஷனல் கிளப்பில் நடத்தப்படும் தமிழக கைவினைப் பொருட்கள் கண்காட்சியை டில்லி தமிழ்நாடு இல்ல உள்ளுறை ஆணையர் ஆஷிஷ் குமார் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். உடன், தமிழ்நாடு இல்ல அதிகாரிகள்.
சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலான மழை பெய்தது திடீரென பெய்த மழையால் மக்கள் நனைந்து கொண்டே பயணங்களை மேற்கொண்டனர் இடம் வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலை குன்றத்தூர்
சோலார் பேனல் நடுவே மரம் வளர்க்கும் ஊராட்சி காங்கயம் அடுத்த, படியூர் ஊராட்சி சார்பில், சம்பந்தம்பாளையம்–படியூர் சாலையில் பொங்கலுார் மீனாட்சி வலசு அருகே ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு, சூரியசக்தி மின்தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. மின்தகடுகள் மேலே, மரம் வளர்ந்து வருவதால், அவை சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மின்தகடுகளை முறையாகப் பராமரிக்காமல் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுகிறது.