எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் மற்றும் நிர்வாகிகள். இடம் : ராயப்பேட்டை
தன் சிறகுகளை விரித்து மகிழும் இந்த பறவையைப் போல, மனிதனும் கவலைகளை மறந்து வாழ ஒரு இடம் தேடுகிறான்... ஆனால் வாழ்க்கை எல்லோருக்கும் அந்த சந்தர்ப்பத்தை தருவதில்லை. இடம்: கோவை செட்டிபாளையம்
கிண்டி ரயில் நிலையத்தில் நடைமேடை மற்றும் மேற்கூரை பணிகள் அரைகுறையாக முடிக்கப்பட்டு இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் இருப்பதால் வெயிலில் அவதிப்படும் பொதுமக்கள்.இடம் : கிண்டி
கொச்சின் ஷிப்ட்யார்ட் லிமிடெட் நிறுவனத்தால் கட்டப்பட்ட மூன்றாவது நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ் மங்களோர்,இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. இடம்:மும்பை,மகராஷ்ட்ரா