டெல்லி தமிழ் கல்விக் கழகம் சார்பில் லோதி ரோட்டில் உள்ள பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது, விழாவில் பள்ளி மாணவ மாணவிகளுடன் பள்ளிச் செயலர் ராஜு, டெல்லி சமச்சங்க துணைத் தலைவர் ராகவன் நாயுடு ஆகியோர் கலந்து கொண்டனர்
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழா நேற்று நடந்தது இதில் கபாலீஸ்வரர் தெப்பத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.