சென்னை நந்தம்பாக்கம் வர்த்தகமையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலை கழகம் இணைந்து நனத்தும் மருத்துவத்தின் எதிர்காலம் குறித்த கருணாநிதி நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாட்டை தொடங்கி வைத்து விழா மலரை வெளியிட்ட மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் .உடன் ( இடது )மக்கள் நல்வாழ்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப் சிங் பேடி , எம்.ஜி.ஆர்.,மருத்துவ பல்கலைகழக துணை வேந்தர் நாராயணசாமி .
சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில் புதியதாக திறக்கப்பட்டுள்ள லு லு தினசரி சூப்பர் மார்கட்டை சபாநாயகர் ஜே.சி.பி.,பிரபாகரனுக்கு , லுலு மார்க்கெட் குழுமத்தின் தலைவர் யூசப் சுற்றிக் காண்பித்தார்
தன் சிறகுகளை விரித்து மகிழும் இந்த பறவையைப் போல, மனிதனும் கவலைகளை மறந்து வாழ ஒரு இடம் தேடுகிறான்... ஆனால் வாழ்க்கை எல்லோருக்கும் அந்த சந்தர்ப்பத்தை தருவதில்லை. இடம்: கோவை செட்டிபாளையம்
கிண்டி ரயில் நிலையத்தில் நடைமேடை மற்றும் மேற்கூரை பணிகள் அரைகுறையாக முடிக்கப்பட்டு இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் இருப்பதால் வெயிலில் அவதிப்படும் பொதுமக்கள்.இடம் : கிண்டி
கொச்சின் ஷிப்ட்யார்ட் லிமிடெட் நிறுவனத்தால் கட்டப்பட்ட மூன்றாவது நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ் மங்களோர்,இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. இடம்:மும்பை,மகராஷ்ட்ரா