சேலம் மாவட்டம் நங்கவல்லியில் ஹிந்து சமய அறநிலை துறையின் கீழ் செயல்படும் 900 ஆண்டுகளுக்கும் பழமையான லட்சுமி நரசிம்மர் கோவில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் விவசாயிகள் இயந்திர நடவுக்காக நாற்றுபாவும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் டஸ்ஸெல்டோர்ப் நகரில் உள்ள குன்ஸ்ட்பாலஸ்ட் கலை அருங்காட்சியகத்தில், பழங்கால கலை பொருட்களுடன் அப்போது பயன்படுத்திய வாசனை திரவியங்களும் இடம்பெற்றன.
கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் 2021 முதல் ராணுவ ஆட்சி நடக்கிறது. வரும் டிசம்பரில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அந்நாட்டு தலைநகர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தேர்தல் பிரசாரம் துவங்கியது. இடம்: யாங்கூன்.
வட்ட வடிவிலான காக்கி நிற தொப்பி அணிந்து வந்த கர்நாடக போலீசாருக்கு நேவி நீல நிறத்தில் புதிய தொப்பி வழங்கப்பட்டு உள்ளது. அறிமுக விழாவில் புதிய தொப்பியுடன் போலீசார். இடம்: விதான் சவுதா, பெங்களூரு