சென்னை ,கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை கழகத்தின் 36வது பட்டமளிப்பு விழாவில், கவர்னர் ரவி மாணவ மாணவிகளுக்கு பட்டம் மற்றும் புத்தக்கங்களை வழங்கினார். இடம் : கிண்டி .
வடபழனி முருகன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவில், சீதா கல்யாணம் காட்சி சுற்றி சுற்றி வரும்படியாக அமைக்கப்பட்டுள்ளது, இதனை ஆர்வத்துடன் பார்வையிடும் மக்கள்.
மதுரை திருப்பரங்குன்றம் ரோட்டில் விளாச்சேரி செல்லும் வாகனங்கள் நேராக சென்று பாலத்தின் அடியில் வலது புறம் திரும்பி தென்கால் கண்மாய் கரையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரோட்டில் செல்ல வேண்டும். இந்த புதிய வழி துாரம் அதிகம் என்பதால் விளாச்சேரியிலிருந்து வரும் வாகனங்களுக்காக மதுரை ரோட்டின் நடுவே அமைக்கப்பட்ட ‘யூ டர்ன்’ வழியை பயன்படுத்தி, எதிர் திசையில் விளாச்சேரி செல்கின்றனர். இதனால் எதிரும் புதிருமாக வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, விபத்தும் அடிக்கடி நடக்கிறது.