மேட்டுப்பாளையம் அருகே உள்ள பத்திரகாளியம்மன் திருக்கோவில் அறங்காவலர் பல்வேறு பணிகளுக்கு தடையாக இருப்பதாகவும் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் முருகனிடம் 23 தேக்கம்பட்டி கிராம விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மனு அளிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு பகுதியில் 2 நாட்கள் பெய்த மழைக்கு பிறகு வெயில் அடிக்க துவங்கிய நிலையில் அறுவடை செய்து வைத்திருந்த சிவப்பு மிளகாய்களை காயவைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி..
புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் நடந்த விழாவில் கவிஞர் நல்லி குப்புசாமி டாக்டர் வனஜா வைத்தியநாதன் ஆகியோருக்கு மயிலும் பொம்மைபுற ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் பாரதி விருதினை வழங்கினார்.
ஆர்.எம்.கே.வி சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய ரக சேலைகளை அறிமுகம் செய்யும் விழா சென்னையில் நடந்தது.புதிய வகை சேலைகளை ஆர்வமுடன் பார்க்கும் பொதுமக்கள்.இடம் : தேனாம்பேட்டை