சென்னை எழும்பூரில் நடந்த தமிழ்நாடு அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில மாநாடு, தினமலர் முன்னாள் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி பிறந்தநாள் விழா மற்றும் தடயம் விருது வழங்கும் விழாவில், விழா மலர் வெளியிடப்பட்டது. இதில் இடமிருந்து வலம் - தமிழ்நாடு அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் பாபு, பத்திரிகையாளர் சுபாஷ், விருத்தாச்சலம் புதுக்குப்பம் டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரேம்குமார், தொழிலதிபர் தனபால் உடையார், சிலை திருட்டு தடுப்பு பிரிவு எஸ்.பி சிவகுமார், பாரதி சுகுமாரன், தொழிலதிபர் துரை உடையார், சென்னை கிரானைட் கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தர்மலிங்கம் மற்றும் திருவாரூர் நியு பாரத் பள்ளி தாளாளர் அருணா.
சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில் புதியதாக திறக்கப்பட்டுள்ள லு லு தினசரி சூப்பர் மார்கட்டை சபாநாயகர் ஜே.சி.பி.,பிரபாகரனுக்கு , லுலு மார்க்கெட் குழுமத்தின் தலைவர் யூசப் சுற்றிக் காண்பித்தார்
தன் சிறகுகளை விரித்து மகிழும் இந்த பறவையைப் போல, மனிதனும் கவலைகளை மறந்து வாழ ஒரு இடம் தேடுகிறான்... ஆனால் வாழ்க்கை எல்லோருக்கும் அந்த சந்தர்ப்பத்தை தருவதில்லை. இடம்: கோவை செட்டிபாளையம்
கிண்டி ரயில் நிலையத்தில் நடைமேடை மற்றும் மேற்கூரை பணிகள் அரைகுறையாக முடிக்கப்பட்டு இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் இருப்பதால் வெயிலில் அவதிப்படும் பொதுமக்கள்.இடம் : கிண்டி
கொச்சின் ஷிப்ட்யார்ட் லிமிடெட் நிறுவனத்தால் கட்டப்பட்ட மூன்றாவது நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ் மங்களோர்,இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. இடம்:மும்பை,மகராஷ்ட்ரா