தினமலர் நாளிதழ், ராஜ் விஜய் டி.வி.எஸ்., நிறுவனத்தின் புதுச்சேரி மற்றும் கடலூர் கிளைகள், கடலூர் சுமங்கலி சில்க்ஸ் இணைந்து ஆசிரியர்களுக்கான மன அழுத்த மேலாண்மை கருத்தரங்கு மற்றும் லட்சிய ஆசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சி கடலூர் செங்குத்த திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் புதுச்சேரி தினமலர் வெளியீட்டாளர் கே. வெங்கட்ராமன் குத்து விளக்கேற்றி கருத்தரங்கை துவக்கி வைத்தார். அருகில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்க இயக்குனர் சீனிவாசன், கல்வியாளர் புகழேந்தி, டி.வி.எஸ்., நிறுவன புதுச்சேரி மண்டல விற்பனை மேலாளர் அரவிந்த், ராஜ் விஜய் டி.வி.எஸ்., நிறுவன மேலாண் இயக்குனர் சீனிவாச மூர்த்தி .
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னிட்டு, தேரோட்டத்தில், வீதி உலா வரும் விநாயகர் தேருக்கு வர்ணம் தீட்டும் பணியில் ஊழியர்கள்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள யோகி ராம் சுரத்குமார் ஆசிரமத்தில், நவராத்திரி விழாவை முன்னிட்டு, வைக்கப்பட்ட கொலு பொம்மைகளை பார்த்த பள்ளி குழந்தைகள்.
சென்னை சோழிங்கநல்லுாரில் உள்ள சென்னை குடிநீர் வாரியத்தின் குடிநீரேற்றும் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட முதல்வர் விஜய்,மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுக்குழாய் அமைக்கும் திட்டத்தின் மாதிரி வடிவமைப்பை பார்வையிட்டார்.
சென்னை, வடபழனி முருகன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள பிரமிட் வடிவிலான ‘சக்தி கொலு’வைக் காண நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது.அதில் இடம் பெற்றுள்ள சிம்மவாஹினி சிலையின் அழகில் மனம் பறிகொடுத்து நின்ற சிறுமி
இன்று குடிநீரை வீணடித்தால், நாளை ரேஷன் கடைகளில்தான் குடிநீர் வாங்க நேரிடும் என்ற கருத்தை முன்வைத்து, கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளி மாணவியர் நடத்திய மழை நீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு நாடகம் பரவலாக பாராட்டைப் பெற்று வருகிறது.
அரசின் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் ஏற்படும் வருவாய் இழப்பிலிருந்து, தனியார் பேருந்துத் துறையைப் பாதுகாக்கக் கோரி, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகத்திற்கு முன்பு மாதிரி பேருந்துடன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.