பிரதோஷத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே சக்தி விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள வெள்ளிங்கிரி ஆண்டவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
புதுச்சேரி சாய் ப்ரைமஸ் பயோ டெக் லிமிடெட் நிறுவனர் சீனிவாசன் பிறந்தநாளை முன்னிட்டு, முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவருக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
பருவ மழை தொடங்க உள்ள நிலையில் சாலையோரங்களில் உள்ள முறிந்து விழும் நிலையில் உள்ள மரங்களை வெட்டி அகற்றும் பணிகள் நெடுஞ்சாலைத்துறையால் தீவிரமாக நடைபெற்று வருகிறது இடம் ஜி.எஸ்.டி சாலை பெருங்களத்தூர்
கோவை வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்தன. இதில் 19 வயது பிரிவில் 100 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் ஓடிய மாணவிகள்.
ராமநாதபுரம் அருகே பழங்குளம் கண்மாயில் ரோட்டரி கிளப் ஆப் ராமநாதபுரம், ஆரோக்கியா மருத்துவமனை இணைந்து நடத்திய மரம் நடும் விழாவில் கலெக்டர் சிவகுரு பிரபாகரன் மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார். அருகில் கிளப் நிர்வாகிகள்.