அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அவர்களுக்கு சிவகங்கை மாவட்டம் சார்பில் மாலை மரியாதை செய்தனர்.
ஸ்ரீபெரும்பதுார் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில், நவராத்திரி விழாவின் நான்காம் நாளான நேற்று, எத்திராஜ நாதவல்லி தாயார் ஹம்ச வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
டில்லி, மயூர் விஹார், மூன்றாவது பேஸில் அமைந்துள்ள, ஸ்ரீ ஆதி சங்கர சேவா சமாஜத்தின், ஸ்ரீ இஷ்ட சித்தி விநாயகர் கோவிலில், நவராத்திரி விழாவை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட கொலுவை தரிசித்த பக்தர்கள்.
அம்பத்துாரில் ஏஐ கொலு சென்னை அம்பத்தூரில், ராஜன் என்பவரது வீடு முழுவதும் பிரம்மாண்டமான கொலு வைக்கப்பட்டுள்ளது.அங்குள்ள தேர்க் கொலு ஏஐ தொழில்நுட்பத்தில் செயல்படுகிறது.பக்கத்தில் போய் நின்று கையெடுத்து கும்பிட்டதும் சுவாமியுடன் கூடிய தேர் நகர்ந்து வணங்குபவர்களின் பக்கத்தில் வந்து நிற்கிறது.