திருப்பூரில் 1191 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சி பகுதிகளுக்கு புதிய குடிநீர் திட்டம் துவக்க விழா சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடந்தது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அருகில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, செய்தி மக்கள் துறை அமைச்சர் சாமிநாதன், மேயர் தினேஷ்குமார், தெற்கு எம் எல் ஏ செல்வராஜ், எம்.பி சுப்பராயன் ஆகியோர் உடனிருந்தனர்.
பஸ் மோதியதால் எப்போது பயணிகள் தலையில் விழுமோ என்ற ஆபத்தான நிலையில் இருந்த பஸ் ஸ்டாண்ட் நிழற்குடை. இந்த வழியில் முதல்வர் செல்கிறார் என்று, தார்ப்பாய் போட்டு மூடி வைத்துள்ளனர் அதிகாரிகள். இடம்:தாம்பரம் வேளச்சேரி சாலை, சென்னை
திருப்பூர், மாநகராட்சி கவுன்சிலர் கூட்ட அரங்கில் தி.மு.க., கன்சிலர் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் போட்டோவை மாட்டியதால் பாஜ., கவுன்சிலர் பிரதமர் போட்டோவையும் வைக்க வேண்டும் என கொண்டு வந்தார்.
ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர்.