அகில இந்திய சிவாஜி பைன் ஆர்ட்ஸ் கிளப் சொசைட்டி சார்பில் நடைபெற்ற விழாவில் பதிப்பகப் பணிகளைப் பாராட்டி மணிமேகலை பிரசுர நிர்வாக இயக்குநர் ரவி தமிழ்வாணனுக்கு அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் மோகன் சிவாஜி கணேசன் விருதினை வழங்கினார். உடன் இடமிருந்து: மறுமலர்ச்சி ஆர்ட்ஸ் அகாடமியின் செயலர் சிவாஜி ராமதாஸ், நடிகை கஸ்தூரி, மருத்துவர் சி.எம்.கே ரெட்டி, நடிகை லட்சுமி ராமிருஷ்ணன்.இடம் : காமராஜர் அரங்கம், தேனாம்பேட்டை.
பல்லாவரம் - குன்றத்தூர் சாலையில் குண்டும் குழியுமாக கிடக்கும் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளதால் பள்ளத்தில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகள் இடம்: அனகாபுத்தூர்
டில்லி குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் செயற்கை நுண்ணறிவு வசதியுடன் கூடிய கட்டுப்பாட்டு அறையை, நீர்வளத்துறை அமைச்சர் பர்வேஷ் சிங் வர்மா நேற்று தொடங்கி வைத்தார். பொதுமக்களின் புகார்களுக்கு நடவடிக்கை எடுத்தல், குடிநீர் குழாய்கள் மற்றும் தண்ணீர் டேங்கர் லாரிகளை கண்காணித்தல் ஆகிய பணிகளை இந்த நவீன கட்டுப்பாட்டு அறையில் இருந்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
மழைநீர் சேகரிப்பு தொடர்பாக கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலை பள்ளியில் மாணவிகள் தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து நாடகம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.