கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் வரி பாக்கி கட்டாத கடைகளை ஊழியர்கள் சீல் வைத்ததால் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் துரைராஜ் தலைமையில் கமிஷனர் காந்தி ராஜை முற்றுகையிட்டனர்.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே முதலியார்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு போதுமான வகுப்பறைகள் இல்லாததால் வெட்ட வெளியில் அமர வைக்கப்பட்டுள்ளனர்.
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான, காலி பணியிடங்களை நிரப்பக் கோரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில், சென்னை கலெக்டர் அலுவலகம் முன், ஆர்பாட்டம் நடந்தினர்.