கடலூரில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அருண் தம்புராஜ், அய்யப்பன் எம்.எல்.ஏ., மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் வழங்கினார். அருகில் ஆர்.டி.ஓ., அபிநயா, துணை மேயர் தாமரைச்செல்வன்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னிட்டு, தேரோட்டத்தில், வீதி உலா வரும் விநாயகர் தேருக்கு வர்ணம் தீட்டும் பணியில் ஊழியர்கள்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள யோகி ராம் சுரத்குமார் ஆசிரமத்தில், நவராத்திரி விழாவை முன்னிட்டு, வைக்கப்பட்ட கொலு பொம்மைகளை பார்த்த பள்ளி குழந்தைகள்.
சென்னை சோழிங்கநல்லுாரில் உள்ள சென்னை குடிநீர் வாரியத்தின் குடிநீரேற்றும் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட முதல்வர் விஜய்,மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுக்குழாய் அமைக்கும் திட்டத்தின் மாதிரி வடிவமைப்பை பார்வையிட்டார்.
சென்னை, வடபழனி முருகன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள பிரமிட் வடிவிலான ‘சக்தி கொலு’வைக் காண நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது.அதில் இடம் பெற்றுள்ள சிம்மவாஹினி சிலையின் அழகில் மனம் பறிகொடுத்து நின்ற சிறுமி
இன்று குடிநீரை வீணடித்தால், நாளை ரேஷன் கடைகளில்தான் குடிநீர் வாங்க நேரிடும் என்ற கருத்தை முன்வைத்து, கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளி மாணவியர் நடத்திய மழை நீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு நாடகம் பரவலாக பாராட்டைப் பெற்று வருகிறது.
அரசின் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் ஏற்படும் வருவாய் இழப்பிலிருந்து, தனியார் பேருந்துத் துறையைப் பாதுகாக்கக் கோரி, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகத்திற்கு முன்பு மாதிரி பேருந்துடன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.