கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்சவ ஒன்பதாம் நாளில் விருத்தகிரீஸ்வரர் சுவாமி உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் பக்தர்கள் வெள்ளத்தில் தேரில் வீதியுலா வந்து அருள்பாலித்தனர்.
கடந்தாண்டு இதே நாளில் காவிரி நீர் ஆர்ப்பரித்து ஓட கல்லணை கடல் போல காட்சியளித்தது. இந்த ஆண்டு கர்நாடகாவும், பருவமழையும் கைவிட்டதால் வெறும் குடிநீர் தேவைக்காக மட்டுமே தண்ணீர் திறந்து விடப்படும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. வறண்டு காட்சியளிக்கும் கல்லணை.
கேரளாவில் கோவில் திருவிழாக்கள் மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் யானை மிரண்டு ஓடுவதால், ரோபோ யானைகள் பயன்படுத்தும் வழக்கம் அதிகரித்துள்ளது. திருச்சூர் மாவட்டம் சாலக்குடி ரோபோ யானைகள் தயாரிப்புக்கான முக்கிய மையமாக உருவெடுத்துள்ளது.
இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் செஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் தமிழ் அமுதனுக்கு கலெக்டர் பத்மஜா வாழ்த்து தெரிவித்தார்.
தவெக இணைப்பு விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் முன்னிலையில் தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர் விஜயபாஸ்கர். இடம்: மாமல்லபுரம்.
பஸ் மோதியதால் எப்போது பயணிகள் தலையில் விழுமோ என்ற ஆபத்தான நிலையில் இருந்த பஸ் ஸ்டாண்ட் நிழற்குடை. இந்த வழியில் முதல்வர் செல்கிறார் என்று, தார்ப்பாய் போட்டு மூடி வைத்துள்ளனர் அதிகாரிகள். இடம்:தாம்பரம் வேளச்சேரி சாலை, சென்னை
திருப்பூர், மாநகராட்சி கவுன்சிலர் கூட்ட அரங்கில் தி.மு.க., கன்சிலர் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் போட்டோவை மாட்டியதால் பாஜ., கவுன்சிலர் பிரதமர் போட்டோவையும் வைக்க வேண்டும் என கொண்டு வந்தார்.