வட்டமிட்டுச் சூழலும் வண்ணப் பாதகையோ நெசவாளர்களின் கைராட்டையோ என எண்ண வேண்டாம். திண்டுக்கல் கோட்டைமாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவில் அமைத்த ராட்டினத்தின் சுழற்சி வேகம்தான் கேமரா கண்களுக்கு இப்படி விருந்தளிக்கிறது.
காஷ்மீரில் பனிமழை பொழிந்து ரம்மியமாக காட்சி அளிக்கிறது. அனந்த்நாக் மாவட்டத்தின் கவ்ரான் கிராமத்தில் பனிக்குவியல்கள் மீது சறுக்கி விளையாடிய சிறுவர் - சிறுமியர்.
தமிழக கைத்தறி தொழில்கள் வளர்ச்சி கழகம் சார்பில் சென்னையில் நான்கு நாட்கள் நடக்கும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்ற மரத்தினால் ஆன சைக்கிளுடன் நிற்கும் சிறுவன்.