மாசி மகத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் நடைபெற்ற தீர்த்தவாரி விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட சாமி சிலைகளுக்கு பூஜை நடைபெற்றது இதில் கலந்துகொண்ட பக்தர்கள்.
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகத்தில் புனித நீர் ஊற்றும் போது ட்ரோன் மூலம் பூக்கள் தூவப்பட்டது.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் ஐந்தாம் நாளாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர், மின்மயானம் அருகே புதிய மயானம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க.,வினர் மாநகராட்சி கமிஷனரிடம் மனு கொடுத்தனர்.
கதிர்காமம் இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 11 நவீன அறுவை சிகிச்சை கூடங்களை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்து பூஜை செய்தார். அருகில் எம்.எல்.ஏ.,ரமேஷ், இயக்குனர் உதயசங்கர்.