கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி கோவை பிஎஸ்ஜி மருத்துவ கல்லூரி மைதானத்தில் நடந்தது. இதில் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி மற்றும் சி.எஸ்.,அகாடமி பள்ளி அணிகள் மோதின.
சென்னை மாமல்லபுரத்தில் நடந்த, தமிழக உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு-2026 ஐ முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்து, பல்வேறு முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடந்த, தமிழக உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு-2026 துவக்க விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலினுக்கு, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நினைவு பரிசு வழங்கினார்.