இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மிதிவண்டி பேரணி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.இடம்: மெரினா கடற்கரை, சென்னை.
ராமநாதபுரம் அருகே பழங்குளம் கண்மாயில் ரோட்டரி கிளப் ஆப் ராமநாதபுரம், ஆரோக்கியா மருத்துவமனை இணைந்து நடத்திய மரம் நடும் விழாவில் கலெக்டர் சிவகுரு பிரபாகரன் மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார். அருகில் கிளப் நிர்வாகிகள்.
ராமேஸ்வரம் இந்திய கடலோர காவல் படையினர் சார்பில் மீனவர்கள் எல்லை தாண்டக் கூடாது என்ற விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். இடம்: பாம்பன் தெற்குவாடி. துறைமுகம்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பராமரிப்பில் உள்ள மாரியம்மன் தெப்பக்குளத்தில் 70 சென்ட் பரப்பளவில் ஆக்கிரமித்திருந்த தாமரைச் செடிகளை கோயில் ஊழியர்கள் அகற்றினர்.
சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில் புதியதாக திறக்கப்பட்டுள்ள லு லு தினசரி சூப்பர் மார்கட்டை சபாநாயகர் ஜே.சி.பி.,பிரபாகரனுக்கு , லுலு மார்க்கெட் குழுமத்தின் தலைவர் யூசப் சுற்றிக் காண்பித்தார்
தன் சிறகுகளை விரித்து மகிழும் இந்த பறவையைப் போல, மனிதனும் கவலைகளை மறந்து வாழ ஒரு இடம் தேடுகிறான்... ஆனால் வாழ்க்கை எல்லோருக்கும் அந்த சந்தர்ப்பத்தை தருவதில்லை. இடம்: கோவை செட்டிபாளையம்