ஊட்டி தாவரவியல் பூங்காவில், நடந்த உலக மகளிர் தின நிகழ்ச்சியில், கலெக்டர் அருணா (இடமிருந்து முன்றாவது) மற்றும் அரசு துறை பெண் அதிகாரிகள் நடனமாடினார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் 1,150 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிகழ்வு நடந்தது. இதில் 45 அடி உயரம் உள்ள இரண்டு தூக்க மரங்களின் மேல் முனையில் கட்டப்பட்ட நான்கு தூக்க வில்களில் குழந்தைகளை ஏந்திச்சென்ற தூக்கக்காரர்கள்.
மேற்காசிய நாடுகளில் நடக்கும் போர் காரணமாக வடமாநிலங்களில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சமையலுக்கு பயன்படுத்தும் வகையில் மாட்டு சாணத்தால் ஆன வறட்டி விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இடம்: பிரயாக்ராஜ், உத்தர பிரதேசம்.
கேரளாவில் ஏப்ரல் 9ல் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதை முன்னிட்டு பிரசாரம் களைகட்டி உள்ளது. பரவூர் தொகுதியில் போட்டியிடும் கேரள சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும் காங்., வேட்பாளருமான வி.டி.சதீஷன் கொச்சியில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பிரதமர் மோடியை மலையாள நடிகர் கிருஷ்ண குமார் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது அவரது பேரக்குழந்தையை தூக்கி கொஞ்சிய மோடி. இடம்: பிரதமர் இல்லம், புதுடில்லி.
வனப்பகுதிகளில் அரிதிலும் அரிதாக காணப்படும் இந்திய சருகுமான்கள், அழிவின் விளிம்பில் உள்ளது; அவை குறித்த விபரங்களை தேடும் பணியை, வனத்துறையினர் துவங்கியுள்ளனர்.
நீரின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் உலக தண்ணீர் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. அன்றாட தேவைக்காக நீண்ட தொலைவில் இருந்து குடத்தில் குடிநீரை சுமந்து சென்ற பெண்கள். இடம்: அகர்தலா, திரிபுரா.