மேட்டுப்பாளையம் நகராட்சி குடியிருப்பு பகுதிகளுக்கு குடி நீர் விநியோகம் செய்ய விலா மரத்தூரில் பவானி ஆற்றில் நீர் உறிஞ்சும் கிணறு அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மழைநீர் சேகரிப்பு தொடர்பாக கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலை பள்ளியில் மாணவிகள் தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து நாடகம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற என்.ஆர்., காங்., அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ.,சட்டசபையில் தற்காலிக சபாநாயகர் அன்பழகன் அறையில் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டார்.