தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பு பட்டம் மற்றும் சென்னை விஐடி பல்கலை சார்பில் பட்டம் செஸ் டோர்னமெண்ட்- 2025 எனும் செஸ் போட்டி நடந்தது இதில் ஆர்வமுடன் பங்கேற்ற மாணவ மாணவிகள்.இடம் : மேலக்கோட்டையூர்.
திருநெல்வேலியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. விடுமுறை நாளில் சுத்தமல்லி தடுப்பணையில் தாமிரபரணி தண்ணீரில் உற்சாக குளியல் போட குவிந்த பொதுமக்கள்.
பந்தலூர் பஜாரில் காலை நேரங்களில் சாலையில் முகாமிடும் தெரு நாய்களால், அவரச கதியில் செல்லும் மாணவர்கள், பணிக்கு செல்லும் மக்கள் அச்சத்துடன் நடமாட வேண்டிய சூழ்நிலை தொடர்கிறது.
புதுச்சேரியில் பெய்த கன மழையால் ரெயின்போ நகர் பகுதிகளில் மழைநீர் புகுந்தததை யொட்டி, உழவர்கரை நகராட்சியினர் ராட்சத மோட்டார் வைத்து மழை நீரை வெளியேற்றினர்.
வடகிழக்கு மாநிலமான சிக்கிமின், க்யால்ஷிங்கில் பெய்து வரும் தொடர் மழையால் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை கவலையுடன் பார்த்த மக்கள். இந்த சம்பவத்தில் 4 பேர் பலியாகினர்.