முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் துவக்கியுள்ள அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனு பெறப்பட்டது. இடம்: ராயப்பேட்டை, சென்னை.
கம்பிகளுக்குள் கானகத்து மயில்.! கோவை மாநகராட்சி வ.உ.சி., உயிரியல் பூங்காவில் இருந்த பறவைகளும் விலங்குகளும் மாற்று இடத்துக்கு அனுப்பப்பட்ட பின்பும் கானகத்து மயிலுக்கு களம் மாற பிடிக்கவில்லை போல
திருப்பூர், த.வெ.க தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் ஆய்வு மேற்கொண்டார். கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் பூ வியாபாரிகளை சந்திக்க முடியாமல் தினறல்.